என் மலர்

  செய்திகள்

  அமைச்சர் பாண்டியராஜன்
  X
  அமைச்சர் பாண்டியராஜன்

  கொரோனா பாதிப்பு 2 மாதங்களில் பூஜ்ஜியம் ஆகிவிடும்- அமைச்சர் பாண்டியராஜன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா பாதிப்பு 2 மாதங்களில் பூஜ்ஜியம் ஆகிவிடும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.
  பூந்தமல்லி:

  திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அயனம்பாக்கம் பகுதியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது. இதில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டு அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து, பெண்களுக்கு மருத்துவ பெட்டகங்களை வழங்கினார்.

  பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது:-

  மக்கள் பிரதிநிதிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும்போது நாங்கள் முதல் வரிசையில் நின்று போட்டுக்கொள்வோம், பிரேசில் நாட்டு அதிபர் இந்தியாவுக்கு நன்றி சொல்கிறார். ஆனால் இங்குள்ள எதிர்க்கட்சிகள் எதிர்வினை ஆற்றி கொண்டிருக்கிறார்கள். தடுப்பூசி விவகாரத்தில் இங்குள்ள எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்குவது அநீதி.

  அரசின் கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடித்தால் 2 மாதங்களில் கொரோனா பாதிப்பு பூஜ்ஜியம் ஆகிவிடும். பாதுகாப்பு இல்லாமல் இருந்தால் அடுத்த அடுத்த அலை உருவாக வாய்ப்பாக அமைந்துவிடும். சசிகலா விரைவில் குணமாகி நல்லமுறையில் தமிழகத்துக்கு வரவேண்டும் என இதயப்பூர்வமாக பிரார்த்தனை செய்கிறோம்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×