என் மலர்

  செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  அவினாசியில் ஆட்டோ டிரைவர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அவினாசியில் தெப்பக்குளத்தில் குதித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
  அவினாசி:

  அவினாசிலிங்கேசுவரர் கோவில் எதிரே உள்ள தெப்பக்குளத்தில் 55 வயது மதிக்க தக்க ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக அவினாசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்றும் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

  விசாரணையில் கோவில் தெப்பக்குளத்தில் பிணமாக மிதந்தவர் அவினாசி அருகே தாசம்பாளையத்தை சேர்ந்த தனபால் (வயது 55), ஆட்டோ டிரைவர் என்றும், மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்த அவர், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
  Next Story
  ×