என் மலர்

  செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  கருங்கல் அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கருங்கல் அருகே மது குடித்ததை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  கருங்கல்:

  கருங்கல் அருகே மது குடித்ததை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

  கருங்கல் அருகே உதயமார்த்தாண்ட பகுதியை சேர்ந்த ரவியின் மகன் சுபின் (வயது 21). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

  இந்த நிலையில் சுபினின் தங்கைக்கு வருகிற 25-ந் தேதி திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடக்க உள்ளது. எனவே தங்கை திருமணம் முடியும் வரையாவது குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று சுபினிடம் பெற்றோர் கூறினார்கள். ஆனால் அவர் அதை கேட்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை குடித்து விட்டு சுபின் வீடு திரும்பியுள்ளார். அவரை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

  இதனால் மனமுடைந்த சுபின் தனது படுக்கையறைக்கு சென்று மின்விசிறியில் துணியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதுகுறித்து கருங்கல் போலீசில் ரவி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து சுபின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  மது குடிப்பதை பெற்றோர் கண்டித்ததால், வாலிபர் தற்கொலை என்ற விபரீத முடிவை தேடி கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
  Next Story
  ×