search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமானத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல வந்திருந்த பயணிகளை படத்தில் காணலாம்.
    X
    விமானத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல வந்திருந்த பயணிகளை படத்தில் காணலாம்.

    பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு விமானங்களில் பயணம் செய்ய பொதுமக்கள் ஆர்வம்

    பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு விமானங்களில் பயணம் செய்ய பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். இதனால் விமானங்களில் கட்டணங்களும் உயர்த்தப்பட்டன.
    சென்னை:

    சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்கு வசதியாக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனாலும் சென்னையில் வசிக்கும் பலர், சொந்த ஊருக்கு விமானங்களில் செல்லவே ஆர்வம் காட்டினர்.

    இதனால் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் செல்லும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    சென்னையில் இருந்து நேற்று தூத்துக்குடிக்கு 3 விமானங்கள் சென்றன. அந்த 3 விமானங்களிலும் அனைத்து இருக்கைகளும் நேற்று மாலைக்கு முன்னதாகவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. இதனால் அதன்பிறகு முன்பதிவு செய்ய முயன்ற பலர் விமானத்தில் செல்ல டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    மதுரைக்கு சென்ற 5 விமானங்கள், திருச்சிக்கு சென்ற 2 விமானங்களிலும் அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. சென்னையில் இருந்து கோவைக்கு 7 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அந்த விமானங்களில் மிகவும் குறைந்த அளவு டிக்கெட்டுகள் மட்டுமே இருந்தது. சென்னையில் இருந்து சேலம் செல்லும் விமானத்திலும் குறைந்த அளவு டிக்கெட்டுகளே இருந்தது.

    விமானங்களில் செல்ல பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் விமான டிக்கெட் கட்டணங்களும் பல மடங்கு அதிகரித்தது. தூத்துக்குடிக்கு வழக்கமாக ரூ.3 ஆயிரமாக இருக்கும் டிக்கெட் கட்டணம் நேற்று ரூ.8,500 வரை அதிகரித்தது.

    மதுரைக்கு ரூ.2,500 ஆக உள்ள டிக்கெட் கட்டணம் ரூ.6 ஆயிரம் வரையும், உயா் வகுப்பு கட்டணம் ரூ.12,500 ஆகவும் அதிகரித்து இருந்தது. திருச்சிக்கு ரூ.2,400 ஆக இருக்கும் கட்டணம் ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமானது. கோவை, சேலம் விமானங்களிலும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு இருந்தது.

    ஆனாலும் பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் குடும்பத்தினருடன் சோ்ந்து கொண்டாடவேண்டும் என்ற ஆா்வத்தில் விமான கட்டண உயா்வை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஆர்வத்துடன் விமானங்களில் பயணம் செய்தனா்.
    Next Story
    ×