என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொறையாறு அருகே காட்டுச்சேரி குளத்தில் மீன்கள் செத்து மிதந்த காட்சி.
    X
    பொறையாறு அருகே காட்டுச்சேரி குளத்தில் மீன்கள் செத்து மிதந்த காட்சி.

    பொறையாறு அருகே குளத்தில் செத்து மிதந்த மீன்கள்- விஷம் கலக்கப்பட்டதா? போலீசார் விசாரணை

    பொறையாறு அருகே குளத்தில் மீன்கள் செத்து மிதந்தன. இந்த குளத்தில் விஷம் கலக்கப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பொறையாறு:

    மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள காட்டுச்சேரி கிராமத்தில் பூசை குளம் என அழைக்கப்படும் பொதுக்குளம் உள்ளது. இப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் பூஜை செய்வதற்கும் குளிப்பதற்கும், கால்நடை குளிப்பாட்டவும் இக்குளத்து நீரை பயன்படுத்தி வந்தனர். நேற்று காலை இந்த குளத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அந்த மீன்களை அப்புறப்படுத்தினர். மேலும் இந்த குளத்தில் தண்ணீர் குடித்த ஆடு ஒன்றும் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் குளத்து நீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் இறந்த மீன்களையும் குளத்து நீரையும் அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். குளத்தில் மீன்கள் செத்து மிதக்க என்ன காரணம்? மர்ம நபர்கள் குளத்தில் விஷம் கலந்தார்களா? என பொறையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×