என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி தாவரவியல் பூங்கா
    X
    ஊட்டி தாவரவியல் பூங்கா

    புத்தாண்டையொட்டி ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    சுற்றுலா மையம் அதிகம் உள்ள நீலகிரி மாவட்டத்துக்கு புத்தாண்டையொட்டி சுற்றுலா பயணிகள் வரத்து அதிகம் உள்ளது.
    ஊட்டி:

    கொரோனா காரணமாக ஓட்டல்கள், விடுதிகளில் புத்தாண்டு நிகழ்ச்சி கொண்டாட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சுற்றுலா மையம் அதிகம் உள்ள நீலகிரி மாவட்டத்துக்கு புத்தாண்டையொட்டி சுற்றுலா பயணிகள் வரத்து அதிகம் உள்ளது.

    இதனால் நேற்று இங்குள்ள அனைத்து ஓட்டல்கள், காட்டேஜ்கள் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்தது. இதுபோன்று ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்பட அனைத்து மையங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கிறது. கொரோனா பரவலை தடுக்க அனைவரும் முக கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×