என் மலர்
செய்திகள்

தற்கொலை
கட்டிட மேஸ்திரி தீக்குளித்து தற்கொலை
கட்டிட மேஸ்திரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் ஜூஜூவாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 48). கட்டிட மேஸ்திரி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக சுப்பிரமணி உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சுப்பிரமணி இறந்து விட்டார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






