என் மலர்
செய்திகள்

அதிமுக அரசின் ஊழல்களை மக்களுக்கு எடுத்து கூறி பிரசாரம் செய்ய வேண்டும்- உதயநிதி ஸ்டாலின்
சிதம்பரம்:
தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.
சிதம்பரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் பிரசாரம் எனக்கு திருப்தி அளித்துள்ளது. செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் வெள்ளம் அதிகமாக உள்ளது. அடுத்த முதல்-அமைச்சர் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தான். எம்.பி. தேர்தலில் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வை அடித்து விரட்டியது போல் சட்டமன்ற தேர்தலிலும் விரட்டியடிக்க வேண்டும்.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் 200 தொகுதியில் வெற்றி என்றார். நான் கூறுகிறேன், 234 தொகுதிகளிலும் நமது கூட்டணி கட்சிகள் வெற்றிபெறும். அ.தி.மு.க. மீது மக்கள் கோபமாக உள்ளனர். கொரோனாவை பார்த்து பயந்து ஓடிய ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி.
எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்- அமைச்சர் அல்ல. சசிகலாவின் காலை பிடித்து முதல்-அமைச்சர் ஆனவர். ஜெயலலிதா, சசிகலா, யாருக்கும் எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை.
கட்சி தொண்டர்கள் கூட்டத்துக்கு வந்தோமா, போனோமா என்று இல்லாமல், அடுத்த 4 மாதங்களும் அ.தி.மு.க. அரசின் ஊழலை மக்களுக்கு எடுத்துக்கூறி பிரசாரம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.






