என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
ராமதாஸ்
பேரூராட்சிகள் முன்பு 23-ந் தேதி பாமக போராட்டம்- தொண்டர்களுக்கு ராமதாஸ் அழைப்பு
By
மாலை மலர்21 Dec 2020 3:35 AM GMT (Updated: 21 Dec 2020 3:35 AM GMT)

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி பேரூராட்சிகள் முன்பு 23-ந் தேதி பாமக போராட்டம் நடத்துகிறது. இதில் பங்கேற்க தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
நம் சாதனைகளை நம்மால் மட்டுமே முறியடிக்க முடியும் என்பதை இப்போது வாரத்துக்கு வாரம் நாம் நிரூபித்துக்கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இம்மாதத்தின் முதல் நாளில் போராடத்தொடங்கியதில் இருந்து இன்று வரை நமது வலிமை அறவழியில் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
இம்மாதம் 23-ந் தேதி புதன்கிழமை தமிழ்நாடு முழுவதும் உள்ள 528 பேரூராட்சிகள் முன் நடைபெறவுள்ள மக்கள்திரள் போராட்டத்தில் இந்த சாதனையும் தகர்க்கப்பட்டு, புதிய சாதனை படைக்கப்படும்; அதைப் பார்க்கத் தயாராகுங்கள் என்று பாட்டாளி சொந்தங்களாகிய நீங்கள் நினைப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
நமது போராட்டத்தின் நோக்கம் நியாயமானது... சரியானது; நமது போராட்டத்தின் வலிமையை தமிழக அரசு புரிந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 12 ஆயிரத்திற்கும் கூடுதலான கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங் களில் நாம் அளித்த மனுக்கள் மாவட்ட கலெக்டர்கள் வழியாக ஆட்சியாளர்களை சென்றடைந்திருக்கக்கூடும்.
மனுக்கள் இப்போதுதான் செல்கின்றன என்றாலும் நமது கோரிக்கைகளும், உணர்வுகளும் ஏற்கனவே அரசுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் அடிப்படையில் வன்னிய சமுதாயத்தின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு இந்நேரம் நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு எந்த முடிவையும் எடுக்காதது வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது.
ஒரு கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், அதை இன்னும் வலிமையாகவும், கூர்மையாகவும் வலியுறுத்தவேண்டும் என்பதுதான் உலகளாவிய புரட்சித் தத்துவம் ஆகும். அந்த வகையில் நாமும் நமது 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரிக்கையை அரசின் காதுகளில் இன்னும் சத்தமாக விழும்படி வலியுறுத்துவோம்.
அதற்கான போராட்டம் தான் வரும் 23-ந் தேதி புதன்கிழமை தமிழ்நாடு முழுவதும் 528 பேரூராட்சி அலுவலகங்கள் முன் நடத்தி, மனு கொடுக்கும் நிகழ்வு ஆகும். இந்த போராட்டமே 20 சதவீத தனி இடஒதுக்கீட்டிற்கான நமது இறுதி போராட்டமாக அமைய வேண்டும். 23-ந் தேதி போராட்டத்தின் வலிமையைப் பார்த்து நமது கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
அந்த அளவுக்கு இந்த மக்கள்திரள் போராட்டத்தை வெற்றிகரமாக பா.ம.க.வினரும், வன்னியர் சங்கத்தினரும், பிற அமைப்புகளும் இணைந்து நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story
×