என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

    சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பூனத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாக்யராஜ் (வயது 34). பெயிண்டர். இவர், கடந்த 2013-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியுள்ளார்.

    இதுகுறித்து, அந்த சிறுமியின் பெற்றோர், கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி பாக்யராஜை கைது செய்து மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை முடிந்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

    சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக பாக்யராஜுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி டாக்டர் சத்தியா தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
    Next Story
    ×