search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரணி தீபம்
    X
    பரணி தீபம்

    கார்த்திகை திருவிழா - அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது

    கார்த்திகை தீபத்திருவிழாவின் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்ற்பட்டது.
    திருவண்ணாமலை :

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    இக்கோவிலுக்கு பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலையை பக்தர்கள் அண்ணாமலை என்று பெயர் சூட்டி சிவனாக வணங்கி வருகின்றனர். பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செல்வார்கள்.

    கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று மாலை 6 மணிக்கு மலையுச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

    இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவின் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக அதிகாலையிலேயே கோவில் நடைதிறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டு உள்ளது.
    Next Story
    ×