search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகை- கடலூர் மாவட்டத்தை இணைக்கும் கொள்ளிடம் பாலத்தை ஆக்கிரமித்துள்ள கருவேல முள்செடிகளை படத்தில் காணலாம்.
    X
    நாகை- கடலூர் மாவட்டத்தை இணைக்கும் கொள்ளிடம் பாலத்தை ஆக்கிரமித்துள்ள கருவேல முள்செடிகளை படத்தில் காணலாம்.

    கொள்ளிடம் பாலத்தை ஆக்கிரமித்துள்ள முள்செடிகளை அகற்ற வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

    நாகை- கடலூர் மாவட்டங்களை இணைக்கும் கொள்ளிடம் பாலத்தை ஆக்கிரமித்துள்ள முள் செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கொள்ளிடம்:

    நாகை மாவட்டம் கொள்ளிடம் சோதனை சாவடியில் இருந்து கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடந்த 1950-ம் ஆண்டு கட்டப்பட்டுள்ள பாலம் கடலூர் மாவட்டத்தையும், நாகை மாவட்டத்தையும் இணைக்கும் பாலமாக உள்ளது. இரவு-பகல் எந்நேரமும் தொடர்ந்து போக்குவரத்து நடைபெற்று கொண்டிருக்கிறது. 70 ஆண்டுகளை கடந்த போதிலும் இன்றும் இந்த பாலம் உறுதியுடனும் தரமாகவும் கம்பீரமாகவும் உள்ளது.

    கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ½ கிலோ மீட்டர் தூரத்துக்கு கட்டப்பட்டுள்ள இந்த பாலம் கடந்த சில ஆண்டுகளாக உரிய பராமரிப்பு இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் மழை பெய்யும் போதெல்லாம் பாலத்தின் நடுவே தேங்கும் மழை நீரை வடிய செய்வதற்கு உரிய குழாய்கள் அமைக்கப்பட்டு இருந்தும், அந்த குழாய்கள் முறையாக சுத்தம் செய்யாமல் இருப்பதால் மழை பெய்தால் தண்ணீர் வடிய வழியில்லாமல் மழைநீர் தேங்கி விடுகிறது. பாலத்தில் அடிக்கடி குப்பை மற்றும் மண் தேங்கி மாசுபடுகிறது. இவைகளை உடனடியாக அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் கொள்ளிடம் சோதனை சாவடியையொட்டி கொள்ளிடம் பாலத்தை கருவேல முள்செடிகள் ஆக்கிரமித்துள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் அந்த முள்செடிகள் வளர்ந்து சாலையை ஆக்கிரமிக்க வாய்ப்பு உள்ளது.

    எனவே பாலத்தையொட்டி வளர்ந்து இருக்கும் கருவேல முள்செடிகளை அகற்றி பாலத்தை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×