என் மலர்

  செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  திருவண்ணாமலை அருகே கூலி தொழிலாளி தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவண்ணாமலை அருகே கூலி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  திருவண்ணாமலை:

  திருவண்ணாமலை நாவக்கரை காலனியை சேர்ந்தவர் ரெங்கநாதன் (வயது 58) , கூலி தொழிலாளி. இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ரெங்கநாதன் அவர் வசித்து வரும் ஓட்டு வீட்டின் பின்புறம் புதிதாக மாடி வீடு கட்டியுள்ளார். நேற்று முன்தினம் இவர் மது குடித்து விட்டு வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்து உள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பினார். இரவு ரெங்கநாதன் மட்டும் ஓட்டு வீட்டில் வந்து படுத்து உள்ளார். மற்றவர்கள் மாடி வீட்டில் இருந்தனர்.

  இந்த நிலையில் ஓட்டு வீட்டில் இருந்த ரெங்கநாதன் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரெங்கநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×