என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  திருவண்ணாமலையில் சப்- இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவண்ணாமலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சப்- இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
  திருவண்ணாமலை:

  திருவண்ணாமலை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். திருவண்ணாமலை காஞ்சி சாலையில் ஒருவர் தகராறு செய்து கொண்டிருந்தார். அவரிடம் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் ஏன் இவ்வாறு செய்கிறாய் என்று கேட்டுள்ளார்.

  அந்த நபர் சப்- இன்ஸ்பெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருவண்ணாமலை வேங்கிகாலை சேர்ந்த வசந்த்ராஜ் (வயது 36) என்பது தெரியவந்தது.
  Next Story
  ×