என் மலர்
செய்திகள்

கைது
தஞ்சையில் 10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது
தஞ்சையில் 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர்:
தஞ்சை கீழவாசல் கண்டிதாசம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மகன் குருபிரசாத்(வயது 19). இவர், 15 வயது மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த மாணவி தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
மேலும் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மாணவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த அவருடைய பெற்றோர் இது குறித்து கேட்ட போது குருபிரசாத் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. மேலும் அவர் மாணவியை திருமணம் செய்ய மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து அந்த மாணவி தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ஜெகதீஸ்வரன், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குருபிரசாத்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story