என் மலர்

  செய்திகள்

  சாலை மறியல்
  X
  சாலை மறியல்

  திருவள்ளூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவள்ளூர் அருகே பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  கும்மிடிப்பூண்டி:

  திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே உள்ள பெரியஓபுளாபுரம் காலனியில் வசித்து வரும் குடியிருப்பினர் சென்று வருவதற்காக தனியார் இடத்தையொட்டி ஒரு பொதுவழி பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

  மேற்கண்ட வழியானது, தனது பட்டா நிலத்தில் உள்ளதாக அந்த தனியார் நபர் கூறி வருவதுடன், அப்பகுதி குடியிருப்பினர் வழியை பயன்படுத்துவதற்கு ஆட்சேபனை தெரிவித்தும் வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், குடியிருப்புகளுக்கான பொதுவழியை தனியாரிடம் இருந்து மீட்டு தரக்கோரி அப்பகுதி குடியிருப்பை சேர்ந்த பொதுமக்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  தகவலறிந்து வந்த ஆரம்பாக்கம் போலீசார் மற்றும் பெரியஓபுளாபுரம் ஊராட்சி மன்ற தலைவி செவ்வந்தி மனோஜ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். இதனையடுத்து 1 மணிநேர சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
  Next Story
  ×