என் மலர்

  செய்திகள்

  ராஜன் செல்லப்பா எம்எல்ஏ
  X
  ராஜன் செல்லப்பா எம்எல்ஏ

  அ.தி.மு.க.வின் சாதனை திட்டங்களை வீடு, வீடாக கொண்டு சேர்க்க வேண்டும்- ராஜன் செல்லப்பா எம்எல்ஏ பேச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அ.தி.மு.க.வின் சாதனை திட்டங்களை வீடு, வீடாக கொண்டு சேர்க்க வேண்டும் என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.
  மதுரை:

  மதுரை அ.தி.மு.க. புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி ஆலோசனைகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

  ஜெயலலிதாவிற்கு பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் அ.தி.மு.க.வை கண் இமை போல் காத்து வருகின்றனர். தங்களது சிறப்பான திட்டங்கள் மூலம் தமிழக மக்களின் முழு நம்பிக்கையை பெற்று உள்ளனர். எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரங்களை எல்லாம் முறியடித்து அ.தி.மு.க. சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் பயன் அடையும் ஆயிரக்கணக்கான வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை மதுரை கண்டிராத வகையில் சுமார் 2 ஆயிரம் கோடி அளவுக்கு பணிகள் நடந்து வருகிறது.

  தி.மு.க.வை மக்களுக்கு நன்றாக தெரியும். தி.மு.க. ஆட்சியில் பட்ட இன்னல்களை மக்கள் மறக்கவில்லை. கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு, ஊழல் என அவர்கள் செய்த கொடுமைகள் மக்கள் மனதில் பசுமரத்து ஆணி போல் பதிந்து விட்டது. எனவே மு.க.ஸ்டாலின் என்ன தான் நீலி கண்ணீர் வடித்தாலும் மக்கள் ஒருபோதும் தி.மு.க.வை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

  அ.தி.மு.க.வின் சரித்திர சாதனை திட்டங்களை வீடு, வீடாக கொண்டு சேர்க்க வேண்டும். எதிர்க்கட்சியின் பொய் பிரசாரங்களை முறியடித்து மீண்டும் தேர்தலில் பெற வேண்டும். எடப்பாடி பழனிசாமி 2021-ம் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்-அமைச்சர் ஆவார். இது தான் நமக்கு இலக்கு. இந்த இலக்கை அடைய அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். இமலாய வெற்றிக்கு உண் உறக்கம் பாராது, அயராது பாடுபட்டு களப்பணியாற்ற வேண்டும்.

  இவ்வாறு அவர் பேசினார்.
  Next Story
  ×