என் மலர்
செய்திகள்

கைது
சிறுமிகளை கடத்தியதாக 2 வாலிபர்கள் கைது
சேந்தமங்கலம் அருகே சிறுமிகளை கடத்தியதாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
நாமகிரிப்பேட்டை:
சேந்தமங்கலம் அருகே மலைவேப்பன்குட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த மோகன்குமார் (வயது 26) என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையொட்டி சிறுமி நாமகிரிப்பேட்டை அருகே வடுகம் முனியம்பாளையத்தில் உள்ள தனது பாட்டில் இருந்து வந்தார். ஆனாலும் மோகன்குமார் செல்போனில் சிறுமியை தொடர்பு கொண்டு தொந்தரவு செய்து வந்ததாகவும், ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றதாகவும் தெரிகிறது.
இதேபோல வடுகம்பாளையத்தை சேர்ந்த 13 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த அசோகன் என்ற கந்தசாமி (22) என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சிறுமியிடம் திருமணம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக தெரிகிறது. இந்த இரு சம்பவங்கள் குறித்து பெற்றோர் நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் நாமகிரிப்பேட்டை (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் இளவரசி, சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மோகன்குமார், அசோகன் ஆகியோரை கைது செய்தனர்.

Next Story