search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முககவசம்
    X
    முககவசம்

    பொள்ளாச்சி பகுதியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை

    பொள்ளாச்சி பகுதியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி பகுதியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொள்ளாச்சியில் நகர பகுதிகள் மட்டுமல்லாது கிராமங்களிலும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதை கட்டுப்படுத்த கிருமி நாசினி மருந்து தெளித்தல், தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பை தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. இதற்கிடையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் தற்போது போலீசார் உதவியுடன் சுகாதாரத்துறையினர் முகக்கவசம் அணியாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். பரிசோதனையில் அவர்களது சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கோவைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பொள்ளாச்சி-பல்லடம் ரோடு போலீஸ் சோதனை சாவடியில் நேற்று முன்தினம் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தொடர்ந்து 10 நாட்கள் முகக்கவசம் அணிந்தால் கோவை மாவட்டத்தில் ஒருவருக்கு கூட தொற்று இருக்காது. மூக்கு, வாய் பகுதியை நன்றாக மூடியப்படி முகக்கவசம் அணிய வேண்டும். அடிக்கடி மூக்கை தொடுவதால் தான் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. முகம் கழுவும் போது மட்டும் ஒருபுறமாக முகக்கவசத்தை கழற்றி விட்டு விட வேண்டும். மேலும் அடிக்கடி சோப்பு அல்லது கிருமி நாசினி மருந்து கொண்டு கைகளை கழுவ வேண்டும்.

    பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதுவரைக்கும் 57 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் தெற்கு ஒன்றிய பகுதியில் மட்டும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒருவரிடம் இருந்து தான் மற்றவர்களுக்கு பரவுகிறது. முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து தான் நோய் பரவும் என்பதால் பரிசோதனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கடைகள், வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கொரோனாவை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×