என் மலர்

  செய்திகள்

  அமைச்சர் கடம்பூர் ராஜூ
  X
  அமைச்சர் கடம்பூர் ராஜூ

  ரஜினி மட்டுமல்ல யார் கட்சி தொடங்கினாலும் அதிமுகவுக்கு பாதிப்பில்லை- அமைச்சர் பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரஜினி மட்டுமல்ல யார் கட்சி தொடங்கினாலும் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

  கோவில்பட்டி:

  கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  நீட் தேர்வு வேண்டாம் என மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டுள்ள ஒரே மாநில தமிழகம் தான். நீட் தேர்வு வேண்டாம் என்பதில் அ.தி.மு.க. உறுதியாக உள்ளது. தமிழகத்திற்கு ஓராண்டுக்காவது விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அரசாணை வெளியிடப்போகும் நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு எதிராக நளினி சிதம்பரம் வாதாடி தடையை பெற்றார். இல்லை என்றால் ஓராண்டு விதிவிலக்கு கிடைத்திருக்கும்.

  காங்கிரஸ், தி.மு.க. இன்று அரசியலுக்காக பேசுகின்றனர். அந்த ஓராண்டு விதிவிலக்கு பெற்றிருந்தால் தொடர்ந்து பெற்றிருக்க வாய்ப்பு இருந்திருக்கும். அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டதால் வேறு வழியின்றி அதனை ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலை உள்ளது. நீட் தேர்வு வேண்டாம் என்பதே எங்களது கொள்கை.

  மேலும் மன அழுத்தத்தின் காரணமாக யாரும் தவறான முடிவுகள் எடுக்கக் கூடாது என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். நீட் தேர்வுக்கு பல்வேறு பயிற்சிகளையும் தமிழக அரசு அளித்து வருகிறது. கட்டணம் இல்லாமல் நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் பணியையும் தமிழக அரசு செய்து வருகிறது.

  வருகிற சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும் என்ற நிலைபாடு மக்களிடையே இருக்கிறது. அதில் எவ்வித மாற்றமும் இல்லை. நடிகர் ரஜினி மட்டுமல்ல யார் புதிய கட்சியை தொடங்கினாலும் பாதிப்பு எங்களுக்கு இல்லை. அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியை சிதறடிக்க எந்த சக்தியாலும் முடியாது. அது பல்வேறு கால கட்டத்தில் நிரூபணமாகியுள்ளது. 3 முறை எம்.ஜி.ஆரும், 2 முறை ஜெயலலிதாவும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளனர். அவர்களின் வழியில் நாங்கள் 3-வது முறையாக தொடர் வெற்றி பெறப்போவது அ.தி.மு.க.தான்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×