என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்.
  X
  கோப்பு படம்.

  தஞ்சை அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சை அருகே நள்ளிரவில் வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 4 பவுன் செயினை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  தஞ்சாவூர்:

  தஞ்சை அருகே உள்ள நா.வல்லுண்டாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 28). நேற்று இரவு காற்றுக்காக இவர்கள் வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கி கொண்டிருந்தனர். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் அங்கு வந்து திடீனெ ராஜலட்சுமியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க செயினை அறுத்தனர்.

  திடுக்கிட்டு எழுந்த ராஜலட்சுமி திருடன். திருடன்... என கத்தி கூச்சலிட்டார். அதற்குள் அந்த மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

  இது குறித்து தஞ்சை தமிழ்பல்கலை கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×