என் மலர்

  செய்திகள்

  கடத்தல்
  X
  கடத்தல்

  பாளை அருகே இளம்பெண் கடத்தல்- வாலிபருக்கு வலைவீச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாளை அருகே இளம்பெண் கடத்தப்பட்டது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

  நெல்லை:

  பாளை அருகே உள்ள பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்தவர் ஞானதாஸ். இவரது மனைவி கன்னிமரியாள். இவர்களது மகள் பிரமிளா (வயது 26). ஞானதாஸ் மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதனால் குடும்பத்துடன் அருகே தங்கி இருந்தார்.

  இந்நிலையில் அவர் ஓய்வு பெற்றதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்தனர். நேற்று பிரமிளா கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் கன்னிமரியாள் பாளை தாலுகா போலீசில் புகார் செய்தார்.

  அதில் மும்பையில் இருந்த போது பிரமிளாவுடன் வேலூரை சேர்ந்த ஆனந்த் என்ற வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டது. எனவே பிரமிளாவை அவர் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக தெரிவித்திருந்தார்.

  இதைத்தொடர்ந்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பிரமிளாவை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×