என் மலர்

  செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  திருவள்ளூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை- போலீசார் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவள்ளூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  திருவள்ளூர்:

  திருவள்ளூரை அடுத்த அரண்வாயல்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி ரேவதி (வயது 25). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதியினருக்கு 6 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஏழுமலை மற்றும் அவரது உறவினர்களான ராணி, தேவி, மாரி ஆகியோர் சேர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

  இது குறித்து ரேவதி தனது பெற்றோருக்கு போனில் தகவல் தெரிவித்து அழுது புலம்பி உள்ளார். அவர்களும் ரேவதியை சமாதானம் செய்து வந்தனர்.

  இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த ரேவதி பூச்சி மருந்து (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

  இது குறித்து அவரது தாய் நாகேந்திரி தன்னுடைய மகளின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

  போலீசார் இது தொடர்பாக ஏழுமலை, ராணி, தேவி, மாரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
  Next Story
  ×