என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாநகராட்சி ஊழியர்
    X
    ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாநகராட்சி ஊழியர்

    காய்கறி மார்க்கெட்டில் ஒலி பெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

    ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் மாநகராட்சி ஊழியர் ஒருவர் ஒலி பெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தற்காலிக காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அங்கு பொதுமக்கள் சிலர் காய்கறி வாங்கும் ஆர்வத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க மறந்து விடுகிறார்கள். எனவே மாநகராட்சி ஊழியர் ஒருவர் ஒலி பெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

    அதில், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும். இந்த விதிமுறைகளை கடைபிடிக்க தவறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது.
    Next Story
    ×