என் மலர்
செய்திகள்

சேலத்தில் கறிக்கோழி விலை ரூ. 220 ஆக உயர்வு
சேலம்:
தமிழகத்தில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பி சாப்பிடுவதால் எந்த விழாவாக இருந்தாலும் கறிக்கோழி முக்கிய இடத்தை பிடிக்கிறது.
இந்த நிலையில் கொரோனா ஊடங்கை யொட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிராய்லர் கோழி கறி ஒரு கிலோ ரூ. 100-க்கு விற்கப்பட்டது. பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் படிப்படியாக விலை அதிகரித்து கடந்த வாரம் ஒரு கிலோ ரூ. 160-க்கு விற்கப்பட்டது. ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூ. 600 முதல் ரூ. 650 வரை விற்கப்பட்டது.
இந்த நிலையில் இறைச்சி விலை மேலும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இந்த வாரம் ஒரு கிலோ கோழிக்கறி ரூ. 220-க்கு விற்பனையானது. இதேபோல் ஆட்டு இறைச்சி ஒரு கிலோ ரூ. 700 முதல் ரூ. 750 வரை விற்கப்படுகிறது. இதனால் குறைந்த அளவிலேயே இறைச்சியை வாங்கி சென்றனர். இதனால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகைளில், ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கறிக்கோழியின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் உற்பத்தி குறைந்துள்ளதால் விலை உயர்ந்து வருகிறது. விரைவில் புரட்டாசி மாதம் பிறக்க உள்ளதால் அப்போது விலை குறைய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.