search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.37¾ லட்சம் மோசடி செய்தவர் கைது

    மதுரையில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.37¾ லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
    மதுரை:

    மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 37). இவர் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    மேலப்பொன்னகரம் சண்முநாதநாதன் முதலாவது தெருவை சோந்தவர் பாண்டியராஜ், அவரது நண்பர் ஆரப்பாளையத்தை சேர்ந்த தேவநாராயணன் ஆகிய இருவரும் என்னை சந்தித்தனர். சென்னையில் அரசு அதிகாரிகள் பலரிடம் பழக்கம் உண்டு. அவர்கள் மூலம் இந்து அறநிலையத்துறை, மின்சார வாரியம், வனத்துறையில் யாருக்கு வேண்டுமானாலும் அரசு வேலை வாங்கி தர முடியும் என்று என்னிடம் கூறினர். அதனை நம்பி நான், எனது உறவினர்கள், நண்பர்கள் என பலரிடமும் 37 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வசூல் செய்து அவர்களிடம் கொடுத்தேன். பணத்தை வாங்கி கொண்டு அவர்கள் இதுநாள் வரை அரசு வேலை வாங்கி தரவில்லை.

    எனவே நான் பணத்தை திரும்பி தருமாறு கேட்டேன். ஆனால் அவர்கள் பணத்தை தரமறுத்து எனக்கு மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் புகாரில் கூறியிருந்தார்.

    அந்த புகாரின் பேரில் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜை கைது செய்தனர். அதை தொடர்ந்து தலைமறைவான தேவநாராயணனை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×