என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  காரில் கடத்திய 2¼ கிலோ கஞ்சா பறிமுதல்- 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இரணியலில் காரில் கடத்திய 2¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதை கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  திங்கள்சந்தை:

  இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயன் ஆகியோர் நேற்று இரணியல் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக கேரள பதிவெண் கொண்ட ஒரு கார் வந்தது. அந்த காரை போலீசார் சைகை காட்டி நிறுத்தினர். காரில் 2 பேர் இருந்தனர். விசாரணையில் அவர்கள் யாதவர் தெருவை சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 27), பிரதீஸ் (27) என்பது தெரியவந்தது.

  ஆனால் 2 பேருமே போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வந்த காரை சோதனை செய்தனர். அப்போது காரில் 2¼ கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கஞ்சாவை அவர்கள் காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

  இதைத் தொடர்ந்து காருடன் 2¼ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, அதை கடத்தி வந்த கிருஷ்ணகுமார், பிரதீஸ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் கஞ்சாவை எங்கிருந்து கடத்தி வந்தனர்? கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை சீரழிக்கும் வகையில் கஞ்சா விற்பனை நடக்கிறதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
  Next Story
  ×