என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
போலீசாருக்கு, பிறந்த நாளில் விடுமுறை அளிக்க வேண்டும் - தென்மண்டல ஐ.ஜி. உத்தரவு
தென் மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் பணிபுரியும் காவல்துறை அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு அவர்களது பிறந்த நாளன்று விடுமுறை வழங்க தென்மண்டல ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்
மதுரை:
தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. முருகன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், “தென் மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் பணிபுரியும் காவல்துறை அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு அவர்களது பிறந்த நாளன்று விடுமுறை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பிறந்த நாளுக்கு முன்தினம், சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு காவல்நிலையத்தில் உள்ள மற்ற காவலர்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். இதுதொடர்பாக அந்தந்த போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.“ என்று கூறியுள்ளார். தென் மண்டல ஐ.ஜி.யின் இந்த அறிவிப்பு மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்ட போலீசாரிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், பிறந்த நாளில் விடுமுறை எடுக்க அனுமதி அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதனால், அந்த தினத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாட முடியும்.
இது போலீசாருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் செய்தி“ என தெரிவித்தனர்.

Next Story