என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி
    X
    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி

    நீட் தேர்வை பிரதமர் ரத்து செய்ய வேண்டும்: புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள்

    பிரதமர் எவ்வித கவுரவமும் பார்க்காமல் வருகிற 13-ந் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதினேன். இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

    இதற்+கிடையே மத்திய அரசு நீட் தேர்வை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் மூலம் தீர்ப்பை பெற்றுள்ளது.

    புதுவை சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

    பல இடங்களுக்கு சென்று தேர்வு எழுதுவதற்கு வாகன வசதி இல்லாத நிலையில், பிரதமர் எவ்வித கவுரவமும் பார்க்காமல் வருகிற 13-ந் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.

    தற்போது சமையல் எரிவாயுக்கு கொடுக்கின்ற மானியத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கச்சா எண்ணை ஒரு பேரல் 140 டாலரில் இருந்து 44 டாலராக ஆகி விட்டது.

    கொரோனாவால் அனைவரும் பாதிக்கப்பட்ட இந்த நேரத்தில் விலையை குறைக்காமல் எரிவாயுக்கான மானியத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு கூறுகிறது.

    இதனால் சாதாரண, நடுத்தர மக்கள் மீது மத்திய அரசுக்கு எந்த விதமான அக்கறையும் இல்லை என்பதை காட்டுகிறது. மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது.

    காங்கிரஸ் ஆட்சியில் எப்படி எரிவாயுக்கு மானியம் வழங்கப்பட்டதோ, அதேபோல் தொடர்ந்து மானியம் வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.
    Next Story
    ×