என் மலர்

  செய்திகள்

  மழை
  X
  மழை

  பரமக்குடி அருகே கனமழையால் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்- பொதுமக்கள் தவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பரமக்குடி அருகே பெய்த கனமழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

  பரமக்குடி:

  பரமக்குடி தாலுகா, போகலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம பகுதிகளில் கனமழை பெய்தது. கன மழையால் வணங்கானேந்தல் காலனி பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமலும் வி‌ஷப் பூச்சிகள் தொல்லை அதிகரிப்பாலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

  மேலும் மழை நீர் வடியாமல் தேங்கியுள்ள தால் கொசுக்கள் உருவாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

  கொரோனா பீதி உள்ள நிலையில் அப்பகுதி மக்களுக்கு தேங்கியுள்ள மழைநீர் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர் வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Next Story
  ×