என் மலர்

  செய்திகள்

  லாட்டரி சீட்டு அச்சடித்து விற்ற 2 பேர்
  X
  லாட்டரி சீட்டு அச்சடித்து விற்ற 2 பேர்

  வேடசந்தூர் அருகே லாட்டரி சீட்டு அச்சடித்து விற்ற 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேடசந்தூர் அருகே லாட்டரி சீட்டு அச்சடித்து விற்ற 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து பணம், ரூ.4½ லட்சம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
  வேடசந்தூர்:

  திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோட்டில், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் அச்சடித்து விற்பனை செய்வதாக திண்டுக்கல் மாவட்ட தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து எரியோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் எரியோடு- அய்யலூர் சாலையில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர்.

  அப்போது அங்கு லாட்டரி சீட்டுகளை அச்சடித்துக்கொண்டிருந்த எரியோட்டை சேர்ந்த பரமசிவம் (வயது 47), நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த விஜயகுமார் (43) ஆகியோரை பிடித்தனர். மேலும் அந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சத்து 93 ஆயிரத்தையும், ரூ.4½ லட்சம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் மற்றும் கம்ப்யூட்டர், பிரிண்டர், செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
  Next Story
  ×