என் மலர்
செய்திகள்

நகை பறிப்பு
வீட்டின் முன்பு நின்றிருந்த மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறிப்பு
மதுரை அருகே வீட்டின் முன்பு நின்றிருந்த மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை சம்மட்டிபுரம் பாண்டிகோவில் தெருவை சேர்ந்தவர் காசிமாயன். இவரது மனைவி அன்னப்பேச்சி(வயது 67). சம்பவத்தன்று இவர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அந்த வழியாக வந்தனர். அவர்களில் ஒருவன் கைகுட்டையால் முகத்தை மூடிய நிலையில் வண்டியில் இருந்து இறங்கி வந்தான். திடீரென்று அவன் அன்னப்பேச்சி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டான்.
இதுகுறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story