search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    சேலம் மாவட்டத்தில் மழை நீடிப்பு

    தம்மம்பட்டி, ஆனைமடுவு, பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெரும்பாலானா ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    தம்மம்பட்டி, ஆனைமடுவு, கரியகோவில் பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வயல் வெளிகளில் தண்ணீர் தேங்கியது. பெரும்பாலானா ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக தம்மம்பட்டியில் 40 மில்லி. மீட்டர் மழை பதிவாகி உள்ளது, ஆனைமடுவு-38, கரியகோவில்- 37, கெங்கவல்லி -5, காடையாம்பட்டி -24, ஏற்காடு -28.2, பெத்தநாயக்கன் பாளையம்-27, வாழப்பாடி -5, மேட்டூர் -2.8, ஆத்தூர் -12.6, சேலம் - 0.5 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 220.20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் ஆங்காங்கே அருவிகள் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை பார்க்கும் பொதுமக்கள் குளித்து மகிழ்கிறார்கள். மேலும் இ-பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே ஏற்காடு செல்ல அனுமதி வழங்கப்படுவதால் ஏராளமான வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.

    Next Story
    ×