என் மலர்

  செய்திகள்

  நத்தம் விஸ்வநாதன்
  X
  நத்தம் விஸ்வநாதன்

  திண்டுக்கல் கிழக்கு அதிமுக மாவட்ட செயலாளராக நத்தம் விஸ்வநாதன் மீண்டும் நியமனம்- தலைமை கழகம் அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக முன்னாள் அமைச்சரும் கட்சியின் அமைப்பு செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

  சென்னை:

  திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் பட்டியலை அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

  திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக முன்னாள் அமைச்சரும் கட்சியின் அமைப்பு செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நத்தம் விஸ்வநாதன் மீண்டும் அ.தி.மு.க. செயலாளர் ஆகி இருக்கிறார்.

  மாவட்ட அவைத் தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. குப்புசாமி நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட இணைச்செயலாளராக நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. தேன்மொழி நியமிக்கப்பட்டுள்ளார். துணைச்செயலாளர்களாக சந்திரா கோபாலகிருஷ்ணன், விஜயபாலமுருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட பொருளாளராக முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

  திண்டுக்கல் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம், அம்மா பேரவை, இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, இலக்கிய அணி, சிறுபான்மையினர் பிரிவு உள்ளிட்ட அமைப்புகளின் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் பெயர் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

  இது போல் பல்வேறு மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பெயர் பட்டியலையும் அ.தி.மு.க. தலைமைகழகம் வெளியிட்டுள்ளது.

  Next Story
  ×