என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வீட்டை இடித்த 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பல்லடத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஏற்பட்ட பிரச்சினையில் வீட்டை இடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  பல்லடம்:

  பல்லடம் கொசவம்பாளையம் சாலையை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (வயது 48). பழக்கடை நடத்தி வருகிறார். பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஏற்பட்ட பிரச்சினையில் இவருடைய வீட்டை பொக்லைன் எந்திரம் கொண்டு வந்து சிலர் இடித்து விட்டதாகவும், இதையடுத்து வீட்டை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்லடம் போலீசில் ராஜேஸ்வரனின் மனைவி கவிதா புகார் செய்தார்.

  புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்கிணரை சேர்ந்த சின்னசாமி(63), ராயர்பாளையத்தை சேர்ந்த தினேஷ் (41) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் இவர்கள் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
  Next Story
  ×