என் மலர்
செய்திகள்

கத்திக்குத்து
ராமநாதபுரம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து
ராமநாதபுரம் அருகே முன்விரோத தகராறில் வாலிபரை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்ற நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே உள்ள பால்கரை பகுதியை சேர்ந்தவர் கணேசன் என்பவரின் மகன் அரவிந்த்குமார் (வயது21). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சித்திரைச்சாமி என்பவரின் மகன் தென்னரசு (24) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் தெற்குவாணிவீதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அங்குள்ளவர்கள் விலக்கி விட்ட நிலையில் ஊருக்கு வந்துவிட்டார்களாம். அங்கு வந்து மீண்டும் தகராறில் ஈடுபட்டு தென்னரசு தான் வைத்திருந்த சிறிய கத்தியால் அரவிந்த்குமாரின் வயிற்றில் குத்தினார். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தென்னரசுவை தேடி வருகின்றனர்.
Next Story