என் மலர்

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    கலசபாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கலசபாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கலசபாக்கம்:

    வேலூர் சலவான்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவகணேசன் (வயது 27). இவர், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவரது உறவினர் திருமணத்திற்காக நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    கலசபாக்கத்தை அடுத்த நாயுடுமங்கலம் கூட்ரோடு அருகே சாலையோரம் நடந்து சென்ற 62 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காயம் அடைந்த சிவகணேசன் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×