என் மலர்

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பொள்ளாச்சி தொழில் அதிபரிடம் ரூ.1.72 கோடி மோசடி செய்த வாலிபர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பொள்ளாச்சி தொழில் அதிபரிடம் ரூ.1.72 கோடி மோசடி செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அருகே உள்ள கணபதி பாளையத்தை சேர்ந்தவர் முத்து. இவர் கிழவன் புதூரில் ரிசார்ட் நடத்தி வருகிறார்.

    இவரது ரிசார்ட்டுக்கு கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த அன்புகுமார் என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது அன்புகுமாருடன், முத்துவுக்கு பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக மாறினர்.

    இருவரும் தொழில் தொடர்பாக அடிக்கடி போனில் பேசி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்து, அன்புகுமாரிடம் ரூ.1 கோடியே 72 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுத்து வங்கியில் செலுத்துமாறு கூறியுள்ளார். ஆனால் அன்புகுமார் வங்கிக்கு செல்லாமல் பணத்தை எடுத்து கொண்டு தலைமறைவாகி விட்டார்.முத்து பல முறை தொடர்பு கொண்டும் அன்புகுமார் போனை எடுக்கவில்லை.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முத்து, சம்பவம் குறித்து ஆனைமலை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் அன்புகுமார் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அன்புகுமாரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அன்புகுமாரின் செல்போன் எண்ணை வைத்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×