என் மலர்

  செய்திகள்

  கேவி தங்கபாலு
  X
  கேவி தங்கபாலு

  கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும்- கே.வி.தங்கபாலு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் மீண்டும் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு கூறினார்.
  சென்னை:

  வ.உ.சி. பிறந்தநாளையொட்டி சென்னையில் அவரது சிலைக்கு தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் திடீர் மறைவு மிகப்பெரிய பேரிழப்பு. அந்த தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது.

  காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் மீண்டும் அந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும். வேட்பாளர் யார் என்பதையெல்லாம் கட்சி மேலிடம்தான் தேர்வு செய்து உரிய நேரத்தில் அறிவிக்கும்.

  தமிழகத்தில் காலியாக இருக்கும் சட்டமன்ற தொகுதிகளுக்கு பொதுத்தேர்தலுடன் சேர்த்தே தேர்தல் நடத்துவது தான் நல்லது. ஏனெனில் வருகிற நவம்பர் மாதம் இடைத்தேர்தலை நடத்தினால் மீண்டும் ஓரிரு மாதங்களில் பொதுத்தேர்தல் வர உள்ளது.

  எனவே அது அரசுக்கும் வேட்பாளர்களுக்கும் வீண் செலவையும், சிரமத்தையும்தான் கொடுக்கும்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×