என் மலர்

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    பட்டாசு ஆலை விபத்து- மு.க.ஸ்டாலின் இரங்கல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காட்டுமன்னார்கோவில் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குருங்குடி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் நாட்டுவெடி தயாரிப்பு ஆலை உரிமையாளர் காந்திமதி உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர். மேலும் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. வெடிவிபத்தில் கட்டடங்கள் தரைமட்டமாகி உள்ளன. மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
    Next Story
    ×