என் மலர்

    செய்திகள்

    ந‌ட்ச‌த்திர‌ ஏரி
    X
    ந‌ட்ச‌த்திர‌ ஏரி

    திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழையால் வேகமாக நிரம்பும் அணைகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த மாதம் முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. ஒரு சில நாட்கள் பெய்யும் கனமழை காரணமாக அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பழனி நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    கோடை கால குடிநீர்தேக்கம் ஏற்கனவே நிறைந்துவிட்ட நிலையில் பாலாறு பொருந்தலாறு அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 65 அடி உயரம் கொண்ட இந்த அணையில் தற்போது 40.06 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 110 கனஅடி தண்ணீர் வருகிறது.

    பழனி நகரில் உள்ள மற்றொரு அணையான வரதமாநதிஅணை அதன் முழு கொள்ளளவான 66.47 அடியை எட்டி உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. அணையில் இருந்து 125 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. இந்த நீர் அருகில் உள்ள குளங்களில் நிரப்பப்பட்டு விவசாய பணிகளுக்கு தயார்படுத்தப்பட்டு வருகிறது.

    கொடைக்கான‌ல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இர‌வு முத‌ல் க‌ன‌ம‌ழை பெய்தது. இத‌னால் கொடைக்கான‌லில் உள்ள நீர் நிலைக‌ள் ம‌ற்றும் ஏரிக‌ள் நிர‌ம்பி வருகின்றன.

    கொடைக்கான‌ல் ம‌த்தியில் அமைந்துள்ள‌ ந‌ட்ச‌த்திர‌ ஏரி தனது முழு கொள்ள‌ள‌வை எட்டியதால் கொடைக்கானல் நகராட்சி பொறியாளர் பிரிவு அதிகாரிகள் ஏரியின் மறுகால் வழியாக தண்ணீரை திறந்து விட்டனர்.

    நேற்று மாலையில் இருந்து ஏரியில் இருந்து 1.50 கனஅடி அள‌வு நீர் வெளியேற்ற‌ப்ப‌ட்டதால்‌ தெர‌சா ந‌க‌ர், டோபிகான‌ல் , பெர்ன்ஹில் ரோடு, குறிஞ்சி ந‌க‌ர் உள்ளிட்ட பகுதிகளில் க‌ரையோர‌ம் வ‌சிக்கும் ம‌க்க‌ள் பாதுகாப்பாக‌ இருக்க‌ வேண்டுமென‌ கொடைக்கான‌ல் ந‌க‌ராட்சி ஆணையாள‌ர் நாராயணன் அறிவுறுத்தியுள்ளார்.

    கடந்த ஒரே வாரத்தில் கொடைக்கானல் ஏரி 2-வது முறையாக நிரம்பி தண்ணீர் வெளியேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

    ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு பகுதியான குமராயிபுதூர், செல்லப்பன்கவுண்டன் புதூர் ஆகிய பகுதிகளில் நீர் பெருக்கெடுத்து அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் சுமார் மூன்று அடிக்கு அதிகமாக தேங்கி நிற்கிறது. இப்பகுதியில் விவசாயம் செய்து வருபவர் சண்முகவேல் இவரது தோட்டத்தில் உள்ள இரண்டு கிணறுகளும் விடிய விடிய பெய்த கனமழையால் நிரம்பி வழிந்தது.

    மேலும் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் இடுப்பு அளவிற்கு தண்ணீர் புகுந்ததால் டிவி, கட்டில், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் நீரில் மூழ்கின. இதனால் சுமார் ரூ.3 லட்சம் வரை அவருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

    எனவே ஒட்டன்சத்திரம் வருவாய் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம்போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×