என் மலர்

  செய்திகள்

  உயிரிழப்பு
  X
  உயிரிழப்பு

  பவானி ஆற்றில் மூழ்கி அண்ணன்-தம்பி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே நீச்சல் கற்க சென்றபோது பவானி ஆற்றில் மூழ்கி அண்ணன், தம்பி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  அந்தியூர்:

  ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையத்தை சேர்ந்தவர் தமிழ் செல்வன். விவசாயி. இவரது மகன்கள் கணேசன் (22). பி.காம் பட்டதாரி. சிவராஜ் (18). பி.காம். சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

  இவர்கள் இருவரும் நீச்சல் தெரியாது என்பதால் அவர்களை நீச்சல் பழக தந்தை தமிழ்செல்வன் பவானி ஆற்றுக்கு சென்றார். கீழ்வாணி பகுதியில் அவர்கள் நீச்சல் பழகி கொண்டு இருந்தனர்.

  அப்போது இருவரும் எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். அவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். அவர்களை காப்பாற்ற தந்தை தமிழ் செல்வன் முயன்றார்.

  ஆனால் முடியவில்லை. இருவரும் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். அப்பகுதியில் உள்ளவர்கள் விரைந்து வந்து தண்ணீருக்குள் இறங்கி சுமார் 30 நிமிடங்கள் போராடி பலியான கணேசன், சிவராஜ் ஆகியோர் உடல்களை மீட்டனர்.

  மகன்களின் உடலை பார்த்து தமிழ்செல்வன் தகறி அழுதார். தனது மகன்களின் சாவுக்கு தானே காரணமாகி போகதாக கூறி தமிழ்செல்வன் கதறினார். இருவரின் உடல்களை ஏற்றி செல்ல வந்த ஆம்புலன் முன் படுத்து கதறி அழுத காட்சி காண்போரை கண் கலங்க செய்தது.

  இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×