search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் ஜெயில்
    X
    வேலூர் ஜெயில்

    வேலூர் ஜெயிலில் கைதிகள் உடல்நிலை கண்காணிப்பு

    தமிழகத்தில் ஜெயிலில் உள்ள கைதிகளின் உடல்நிலை தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேலூர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஜெயிலில் தனித்தனியாக டாக்டர்கள் உள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஜெயிலில் 1000-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கைதிகளை உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் புழல் ஜெயிலில் புதிதாக வந்த கைதிகள் மூலம் சுமார் 30 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு சிறையிலேயே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

    இதனால் தமிழகத்தில் ஜெயிலில் உள்ள கைதிகளின் உடல்நிலை தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேலூர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஜெயிலில் தனித்தனியாக டாக்டர்கள் உள்ளனர். கிளினிக் உள்ளது.

    இங்கு கைதிகளுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் உள்ளது.ஜெயில் டாக்டர்கள் கைதிகள் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.

    அவர்களில் யாருக்காவது சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சுகாதார துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதுவரை யாருக்கும் அறிகுறி எதுவும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

    வேலூர் ஜெயிலில் புதிதாக அடைக்கப்படும் கைதிகளை ஏற்கனவே உள்ள கைதிகளுடன் அடைக்கக்கூடாது.

    அவர்களை தனியாக அடைக்க வேண்டும். அவர்களுடைய உடல் நிலையை கண்காணிக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் கூறியுள்ளனர்.

    அதன்படி வேலூர் ஜெயிலுக்கு புதிதாக வரும் கைதிகள் தனியாக அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×