search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காகிதப்பட்டறை பகுதியில் உள்ள தென்னைமரங்கள் சுழன்று வீசுவதை காணலாம்
    X
    காகிதப்பட்டறை பகுதியில் உள்ள தென்னைமரங்கள் சுழன்று வீசுவதை காணலாம்

    வேலூரில் சூறைகாற்றுடன் மழை- பொதுமக்கள் மகிழ்ச்சி

    வேலூரில் சூறைகாற்றுடன் மழை பெய்ததால் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    வேலூர்:

    வேலூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர். இரவிலும் அனல் காற்று வீசியதால் அவர்கள் தூக்கத்தை தொலைத்தனர். ஊரடங்கு இருப்பதாலும், வெயிலில் தாக்கத்தாலும் பொதுமக்கள் பலர் வீடுகளிலேயே தஞ்சம் அடைந்துள்ளனர்.

    வேலூரில் கடந்த சில நாட்களாக 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. நேற்று முன்தினம் 104.7 டிகிரி பதிவாகி இருந்தது. நேற்று பிற்பகல் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. இந்தநிலையில் பிற்பகல் 3 மணி அளவில் திடீரென சூறாவளி காற்று வீசியது. இதனால் சாலையில் புழுதி கிளம்பியது. அப்போது வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். தொடர்ந்து 4 மணி அளவில் திடீரென மழை பெய்தது. ஆனால் மழை அதிக நேரம் நீடிக்கவில்லை. சிறிது நேரத்திலேயே நின்று விட்டது. அதைத்தொடர்ந்து குளிர்ந்தகாற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 
    Next Story
    ×