என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம்
    X
    முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம்

    ஊரடங்கு காலத்திற்கு பிறகே புதுவையில் மதுக்கடை திறப்பு - அமைச்சரவையில் முடிவு

    தற்போதைய சூழ்நிலையில் ஆன்லைன் மதுபான விற்பனை சாத்தியமாகாது என்பதால், ஊரடங்கு காலத்திற்கு பிறகே புதுவையில் மதுக்கடை திறக்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் சட்டமன்ற வளாகத்தில் உள்ள கேபினட் அறையில் நடந்தது.

    கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், தலைமைச் செயலர் அஸ்வனி குமார் மற்றும் அரசுத் துறை செயலர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மதுபான கடை


    கூட்டத்தில் மதுபான கடைகளை திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தில் ஐகோர்ட்டு தலையிட்டு மதுபான கடைகளை மூட உத்தரவிட்டு ஆன்லைன் மூலம் மதுபானம் விற்க அறிவுறுத்தி உள்ளது தொடர்பாகவும விவாதிக்கப்பட்டது.

    மேலும் ஆன்லைன் மூலம் மதுபான விற்பனை செய்வதின் சாதக பாதகங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    முடிவில் தற்போதைய சூழ்நிலையில் ஆன்லைன் மதுபான விற்பனை என்பது சாத்தியமாகாது என்பதால் மதுக்கடைகளை திறப்பதில்லை என்றும் ஊரடங்கு காலம் முடியும்போது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
    Next Story
    ×