என் மலர்tooltip icon

    செய்திகள்

    துரைமுருகன்
    X
    துரைமுருகன்

    கொரோனா ஒரு ஆட்கொல்லி தொற்று- துரைமுருகன் பேட்டி

    கொரோனா மிகவும் ஆட்கொல்லி தொற்றாகும். எனவே இந்த நோய் கிருமியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துரைமுகன் கூறியுள்ளார்.
    வேலூர்:

    வேலூரில் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோயம்பேடு மார்க்கெட்டை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கூறினோம். ஆனால் அரசு பூக்கடையை மட்டுமே மாற்ற ஏற்பாடு செய்தது. பொது முடக்கம் திடீரென அறிவிக்கப்பட்டதால் தான் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    இதன் விளைவாகவே தொற்றும் அதிகரித்தது. எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்தினால் தொற்று மேலும் பரவாமல் தடுக்கப்படும்.

    கொரோனா மிகவும் ஆட்கொல்லி தொற்றாகும். எனவே கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
    Next Story
    ×