என் மலர்
செய்திகள்

அரிசி
வடமாநில தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள்
பவானி அருகே வடமாநில தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள மயிலம்பாடி பகுதியில் வீட்டு வசதி வாரியம் சார்பில் 499, வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
மேலும் இங்கு பணிபுரியும் சுமார் 183, பேர் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தற்போது அவர்களுக்கு வேலையில்லாமல் இருந்தனர். இதனால் பவானி போலீசார் சார்பில் அரிசி, பருப்பு, ஆயில், காய்கறிகள் போன்றவற்றை பவானி போலீஸ் துணை சூப்பிரண்டு சேகர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், கவுன்சிலர் வாத்தியார் என்கின்ற குப்புசாமி, உதவி செயற்பொறியாளர் அசோகன், உதவி பொறியாளர் சுப்பிரமணி, காண்ட்ராக்டர் பாக்கியா, அஸோசியேஷன் வெங்கடேஷ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் வடிவேல் குமார் விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






