என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கோயம்பேடு மார்க்கெட் மூலம் கடலூரில் இன்று மட்டும் 107 பேருக்கு கொரோனா

    சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூலம் கடலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் 107 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
    கடலூர்:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சென்றவர்களால் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு சென்ற 107 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    இதனால் கடலூரில் கோயம்பேடு மார்க்கெட் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 129-ஆக உள்ளது.

    கடலூரில் இதுவரை 699 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட 699 பேரும் கோயம்பேடு மார்க்கெட் உடன் தொடர்புடையவர்கள் என்றும் கடலூரில் கிராமங்கள் தோறும் குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து பிற மாவட்டங்கள் சென்றவர்களால் ஏற்பட்ட பாதிப்பு விவரம்:-

    கடலூர் - 129
    விழுப்புரம் - 76
    சென்னை - 63
    அரியலூர் - 42
    காஞ்சிபுரம் - 7
    பெரம்பலூர், தஞ்சாவூர் திருவாரூரில் தலா ஒருவருக்கு பாதிப்பு.
    Next Story
    ×