search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண மோசடி
    X
    பண மோசடி

    கொரோனா நிவாரண நிதி வந்ததாக கூறி விவசாயிடம் ரூ.18 ஆயிரம் பண மோசடி

    ஆலங்குடி அருகே கொரோனா நிவாரண நிதி வந்துள்ளதாக கூறி விவசாயிடம் ரூ.18 ஆயிரம் பண மோசடி நடந்துள்ளது.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகிலுள்ள கீழப்புலவன்காடு பகுதியை சேர்ந்தவர் பழனியாண்டி மகன் செல்லக்கண்ணு, விவசாயி. இவரிடம் இருந்து கொரோனா நிவாரண நிதி வந்துள்ளதாக கூறி பண மோசடி நடந்துள்ளது. அது பற்றிய விபரம் வருமாறு:-

    சென்னை அண்ணாநகர் பேங்க் ஆப் இந்தியா வங்கியிலிருந்து பேசுவதாக எனது தம்பி ஈஸ்வவரனுக்கு நேற்று மாலை செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் உங்களுக்கு கொரோனா வைரஸ் நிவா ரணநிதி வந்துள்ளது. அத னால் உங்கள் ஏ.டி.எம். கார்டு எண்ணைக் கூறுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு ஈஸ்வரன் என்னிடம் கார்டு இல்லை என்று கூறி, அண்ணன் செல்லக்கண்ணுவிடம் செல்போனைக் கொடுத்துள்ளார்.

    இதை உண்மை என்று நம்பிய செல்லக்கண்ணு அடையாளம் தெரியாத நபரிடம் தன்னுடைய ஏ.டி.எம். எண், ரகசிய எண், வங்கி கணக்கு எண் என எல்லாவற்றையும் கூறிவிட்டார்.

    அவர் கூறிய சிறிதுநேரத்தில் அவரது கணக்கிலிருந்து ரூ.9,500 எடுத்ததற்கான மெசேஜ் வந்துள்ளது. அடுத்ததாக ரூ.9,000 எடுத்ததாக மெசேஜ் வந்துள்ளது. மொத்தம் ரூ.18,500 அபேஸ் செய்யப்பட்டுள்ளது.

    அழைத்த எண்ணுக்கு மீண்டும் தொடர்பு கொண்ட போது செல் அணைக்கப்பட்டிருந்தது. அப்பொழுதுதான் செல்லக்கண்ணுதான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார்.

    பின்னர் இதுதொடர்பாக சம்பட்டி விடுதி போலீசில் செல்லக்கண்ணு புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் சம்பட்டிவிடுதி சப்- இன்ஸ்பெக்டர் அப்துல் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    Next Story
    ×