என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கரன்சி
    X
    இந்திய கரன்சி

    தடைக்கால நிவாரணமாக மீனவர்களுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கவேண்டும்- திமுக கோரிக்கை

    தடைக்கால நிவாரணமாக மீனவர்களுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கவேண்டும் என்று திமுக அமைப்பாளர் நாஜிம் கோரிக்கை விடுத்துள்ளார்.
    காரைக்கால்:

    புதுச்சேரி முன்னாள் அமைச்சரும், தி.மு.க. அமைப்பாளருமான நாஜிம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா வைரஸ் காரணமாக, மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள ஊரடங்கால் மீன்பிடி தொழிலுக்கு மீனவர்கள் செல்லவில்லை. இந்த காலத்தையும் மீன்பிடி தடைக்காலத்தில் சேர்த்து ஒவ்வொரு மீனவர் குடும்பத்திற்கும் தலா ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    அண்டை மாவட்டங்களில் பைபர் படகுகள் தாராளமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும்போது, காரைக்காலில் மட்டும் இதற்கு தடை விதிப்பது கண்டனத்துக்குரியது. எனவே பைபர் படகுகளை வழக்கம்போல மீன்பிடி தொழிலில் ஈடுபட அரசு அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×